Friday, 11 January 2013

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தரும் பதில் :ஏன் ஏமாறுகிறார்கள்.., ஏன் ஏமாற்றுகிறார்கள்.. ? ஏன் ஏமாற்றுகிறோம்... , ஏன் ஏமா ந்தோம்.. ?

குறுக்கு வழியில்  

வாழ்வு தேடிடும் 

 குருட்டு உலகமடா

படம்: மகாதேவி

இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1957

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
... .. ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இத
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ
 
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா 

http://www.pattukkottaiyar.com/site

Money… money... money…
 
No comments:

Post a Comment