"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Monday, 23 November 2015

உங்கள் அபிமான அஜித், விஜை, அரசியல்வாதிகள் பின்னால் போங்கள்...

face book --  ஒரு ரௌண்டு வந்தப்ப நடிகர்களையும் அரசியல்வதிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் எத்திர்கால இளைய சமுதாயத்திற்கு நல்லா உண்மை புரியட்டுமேன்னு  நினைத்து, என்னை செருப்பால் அடித்தது போல இருந்தவற்றை  உங்களுடன்  பகிர்கிறேன் . இதுக்கு பிறகும் புரியலன்னா... உங்கள் அபிமான அஜித், விஜை, அரசியல்வாதிகள் பின்னால் போங்கள் .... உங்களுக்கென்று ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ஓடிவந்து உதவுகிறவர்கள் தான் உண்மையான "HEROES ". துன்பம் வருமுன் காப்பவர்கள் தான் உண்மையான அரசியல்வாதி . உண்மையான அரசியல்வாதிகளை  தேர்ந்தெடுங்கள் , நல்ல தலைவர்களை   தேர்ந்தெடுங்கள், ...
இதுக்கு பிறகும் புரியலன்னா... உங்கள் அபிமான அஜித், விஜை, அரசியல்வாதிகள் பின்னால் போங்கள்.....
















உங்கள் அபிமான அஜித்விஜைஅரசியல்வாதிகள் பின்னால் போங்கள்.....


"Cogito ergo sum"

Friday, 30 October 2015

when we are afraid, frightened or scared of our own shadow.... remember the EAGLE that nested on the cliffs our hearts...



Don't forget –
there is a dormant Eagle instinct  
resides within us....

REF/Story of an Eagle - A Very Motivational Story! MUST WATCH!
https://www.youtube.com/watch?v=aAOsVeZzT94




Are you ready for the change......
change


"Cogito ergo sum"

Thursday, 27 August 2015

தெருவுக்கு வருவோம்.....கோபக்காரர்கள் மட்டும் இதைப்படிக்கவும். Others take diversion...




கோபக்காரர்கள் மட்டும் இதைப்படிக்கவும். Others take diversion
தெருவுக்கு வருவோம்...

கோபம் கோபமாக வருகிறது.... நமக்கு நல்லது செய்வார்கள் என்று காத்திருந்து காத்திருந்து தலைமுடி வெள்ளையானது தான் மிஞ்சம். எக்கச்சக்கமான திட்டங்கள், எல்லாம் கண்துடைப்புக்காக கனஜோராக அரங்கேறுகின்றன. வைற்றுப்பிழைப்பிற்காக வீட்டில் இருந்து புறப்படும் இடமிருந்து சென்று சேரும் வரை எதைப் பார்த்தாலும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. செல்லும் இடமெல்லாம் குப்பை, துர்நாற்றம், பாதுகாப்பில்லாத ஆபத்தான சாலைகள், திரும்பிய பக்கமெல்லாம் சர்வசாதரணமாக எளிதாக கிடைக்கும்  பாதுகாப்பில்லாத  நம்மை  நோயாளிகளாக மாற்றிய தின்பண்டங்களும் உணவு வகைகளும். ..... இன்னும் எவ்வளவோ..... அரசாங்கம் செய்யும்... தன் மக்களின் நலனில் அக்கறை எடுத்து வழவைக்குமா என்றால்.... அது தான் இல்லை... இன்று அரசாங்கம் என்றால் மக்களை மூளைச் சலவைச் செய்து மக்களிடம் நீ இந்த சாதி. அந்த மதம், வேற கட்சி என்று  நம்மை பிரித்து... இலவசங்களை அள்ளித் தெளித்து நம்மை முட்டாள்கள் என்று  நிரூபித்துவிட்டார்கள். கோபம் கோபமாக வருகிறது.எதுவரை நமது இயலாமையை சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கப்போகிறோம். எத்தனைநாள் தான் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லதவர்களைப்போல வேடிக்கைப்பார்துக்கொண்டிருக்கப்போகிறோம். எந்த அரசானாலும், எந்த கட்சியானாலும் நம்மை  கொல்லையடிப்பதிலேயே மாறி மாறி போட்டிப்போடுகின்றன. சேவை மனப்பான்மை, தன்னலமில்லாதா தொண்டுமனப்பான்மை, நேர்மையான தலைவர்களால் மட்டுமே நம்மையும் நமது எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும். கோபம் கோபமாக வருகிறது..  இங்கு எதுவுமே தரமில்லை. தகுதியும் தரமுமில்லாத தலைவர்கள், தரமில்லாத வாழ்க்கைச் சூழல்...எங்கும் எதிலும் தரமில்லை.  எப்படியாவது கையில் நாலு காசை பார்த்துவிடவேண்டும் என்ற வெறிபிடித்த நாய்களாய் பைத்தியங்களாய் எல்லோரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். கோபம் கோபமாக வருகிறது..... என்ன செய்யலாம்... எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... இவர்களால் நமக்கு நல்லது நடக்குமா? நடக்கும்.???.. நல்லது செய்வது போல் நாடகமாடி கொள்ளையடிப்பதில் எல்லோருமே கில்லாடிகள். மக்களை முன்வைத்து அவர்கள் நடத்தும் ஏதாவது இதுவரை நீடித்த பலனைத் தந்திருக்கிறதா? இன்னும் எத்தனை நாள் தான் காத்துக்கொண்டிருப்பது அவர்கள்  நமது நலனில் உண்மையான அக்கறைக்கொல்வார்கள் என்று? நம்மையும் நமது எதிர்காலத்தையும் சிறிது சிறிதாக கொன்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஏன் இன்னும் உணரவில்லை... இல்லை இல்லை ...இன்னும் எதற்காக தட்டிக்கழித்துக்கொடிருகிறோம்?  கோபம் கோபமாக வருகிறது.
அசெ- நாசெ- ரெ -க  இயக்கம்
அரசு செய்யாததை நாமே செய்ய ரெடியா? கடவுள் . 
அசெ- நாசெ- ரெ - க இயக்கம்!

அரசு செய்யாததை நாம் செய்யும் போது மனிதர்கள் நமக்கு இடையூரு செய்யலாம்,. எனவே நம்புங்கள் நல்லது செய்பவர்கள் பக்கம் கடவுள் எப்பவுமே துணை நிற்பார் ...... அசெ- நாசெ- ரெ -க  இயக்கம்

அசெ- நாசெ- ரெ -க  இயக்கத்தில் சேர ரெடியா? .....
எபோழுதுமே மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும் எண்ணங்கள் இன்று புயலாய் தாக்கியதன் விளைவே அசெ- நாசெ- ரெ - இயக்கம். இன்று நான் ஒரு தனி மரம்( நீங்களும்  இதையே நினைப்பவராக   இருக்கலாம்) நிச்சயம் ஒரு தோப்பாக உதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது எனது நம்பிக்கை. வழக்கம் போல எனது பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஊரெங்கும் நமது அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதை பறைசாற்றும் சாலையில் உள்ள பள்ளத்தில் தடுமாறியபோது எனது மரமண்டைக்கு உரைத்தது. எதற்கெடுத்தாலும் எல்லாவற்றிலும் வரியை வாங்கிக்கொண்டு நமது உயிரைப் பறிக்கும் வேலையைப் பார்க்கும் இந்த அரசாங்கத்தை நம்பி பிரயோசனமில்லை  என்று இதுவரை நான் பெற்ற அனுபவம் உரக்கச் சொன்னது.
1. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க குட்டை குளங்களை தோண்டாமல் சாலைகளில் பள்ளங்கள் குழிகள் ஏற்படுமாறு மட்டமான சாலைகளை அமைத்து  RAIN WATER  HARVESTING - மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நமது அரசாங்கம் வெகு சிறப்பாக செயல்படுத்துகிறது.
2. நாம் உண்ணும் உணவு எந்த வகையில் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது என்று யாருக்காவது தெரியுமா? ரமில்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்கிற உணவுகளை வியாபாரம் செய்வதற்கு அனுமதிப்பது யார்? கண்டிப்பாக மக்களைப் பற்றி சிறிதுகூட கவலைப்படாதவர்களாகத்தான் இருக்கும்.
.... இன்னும் எவ்வளவோ .....

நமது பணத்தை வாங்கிக்கொண்டு நமக்காக வேலை செய்யாதவர்களை நம்பி ஏமாந்தது போதும்.
துடிப்புள்ள இளையோர்,
சமுதாயத்தை மாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள் ,
 மனதில் நேர்மையும் வைராக்கியமும் உள்ளவர்கள்
 யாவரும் வாருங்கள் நமது நாட்டை நாமே காப்பாற்றுவோம். நமது எதிர்காலத்தையும் நமது பிள்ளைகளின் வருங்காலத்தையும் குழி தோண்டி புதைப்போரிடமிருந்து காப்பாற்றுவோம்.

இயக்கத்தின் இதயமான நல்லவர்கள் இங்கே குவியும் போது இதயம் துடிக்கும், அசெ- நாசெ- ரெ -க  இயக்கம் இயங்கும்.
 அசெ- நாசெ- ரெ -க இயக்கத்தில்  இணைய விரும்புகிறவர்கள், உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இயக்கத்தின் பிறந்தநாளை சேர்ந்தே முடிவு செய்வோம்
தெருவுக்கு வருவோம்.
நமது தெருவில் இருந்து துவங்குவோம். ஒட்டு வேட்டைக்காக வேண்டுமானால் கட்சிகள் நமது தெருவை எட்டிப்பார்க்கலாம்... ஆனால் அரசின் திட்டங்கள் முழுமையாக நமது தெருவையும் வீட்டையும்  அலங்கரிக்கின்றனவா என்று எந்த அரசியல்வாதிக்கும் நேரம் இருக்காது. மக்களின் தலைவர்கள் என்று எப்படி இவர்கள் தங்களுக்கு அடைமொழிகளை வைத்துக்கொல்கிரார்களோ என்று புரியவில்லை....எல்லாம் விளம்பரம். நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சண்டைபோடுவதிலேயே நமது வரிப்பணம் விரையமாக்கப்படுகிறது. அவரவர் கட்சிகளின் சாதனைகள் என்று முழுமையாக உருப்படியாக செயல்படாத திட்டங்களை பட்டியலிடுவதிலும், அவரவர் தலைவர்களின் புகழ் பாடுவதிலும் நமது வரிப்பணம் விரையமாக்கப்படுகிறது. நமது வீடும் தெருவும் இவர்களுக்கு முக்கியமில்லை. தெருவுக்கு வருவோம். நம்மையும், நமது வீட்டையும், நமது எதிர்காலத்தையும் காப்பாற்றுவோம்.    
தெருவுக்கு வருவோம்.
"Cogito ergo sum"

Sunday, 1 March 2015

Homework- தலைவலிக்கு ஒரு super answer: மனமாறவிடாமல் நம்மை மிருகநிலைக்குத்தள்ளும் கல்வியால் என்ன பயன்....

பணத்தைக்கொட்டி அரக்கர்களையும், அசுரர்களையும் தான் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்..... 



இந்தக் குறும்படம் நமது கண்களைத் திறக்கட்டும்...


Reference:
(https://www.youtube.com/watch?v=zkQmhogJUbk
Published on Jan 9, 2013
This movie is about a student who didn't complete the homework. The teacher punishes the student. Later, the teacher finds the reason why that student didn't complete the homework. At last, the teacher finds a solution.
This film was directed by the primary school teachers of Tamilnadu & Puducherry.
S. Muniyappan, R. Ezhumalai, K. Selvamuthukumaran, S. Simon Peeter Paul.
For Suggestion Please Contact: 9790213194 / 9894631655)




ஒரு குழந்தையை பண்புள்ள ஒழுக்கமான மனிதனாக உருவாக்குவதே கல்வியின் தலையாய கடமை, 
அப்படியென்றால் இன்று கல்வி என்ற பெயரில் நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும்  உருக்குலைத்து மனிதாபிமானமில்லாத ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பி ஒருவரை ஒருவர் கைகாட்டி, கைகட்டி வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 
ஆசிரியர்களை மதிக்காத மாணவர்களை பார்க்கும்போதும்,  அசிங்கமான வார்த்தைகளை பள்ளியில் கேட்கும்போதும்.... கட்டுமிராண்டிகளைத்தான் இன்றைய கல்வி உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. நமது கல்வித்திட்டங்கள் சிறந்த மனிதர்களை உருவாக்கியிருந்தால்.... ஏன் நமது அரசியல் தலைவர்கள் திருடர்களாக இருக்கிறாகள்? நாம் ஏன் திருடர்களை தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறோம்? 
நாம் கற்ற கல்வியால் யாருக்கும் பயனில்லை.....
இந்தக் குறும்படம் நமது கண்களைத் திறக்கட்டும்...





நமது குழந்தைகளின் சந்தோசத்தை பறித்து,
அவர்களிடம் விஷத்தை விதைத்து, தீயகுணங்களை வளர்த்துவிடும் பயிற்சிக்கூடங்களாகத்த்தான் இன்றைய கல்வி கொடிகட்டி பறக்கிறது... பணத்தைக்கொட்டி அரக்கர்களையும், அசுரர்களையும் தான் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்..... 
எல்லாம் மாறவேண்டும்.....எல்லா குழந்தைகளும் சந்தோமாக பள்ளிக்கு செல்லவேண்டும்... நல்லவர்களாக வளரவேண்டும்,  நல்லவர்களாக வாழவேண்டும்......

"Cogito ergo sum"