"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Wednesday, 20 February 2013

"பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்து சேராது " சிலுவைப்பாதை - இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை சின்னாபின்னமான சிலுவைப்பாதையின் சுவடுகள் ....

இந்தப் பாதையின் பதிவுகளை படித்துவிட்டு பயம் வந்தால், சிலுவையில் யாரையோ அறைந்து கொல்கிறீர்கள்  என்பது புரியும் .

சிலரது உல்லாசத்திற்காகவும் , சுயலாபத்திற்காகவும்  பாதை திசைமாறியது .

சிலுவைப்பாதை - இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை
சின்னாபின்னமான    சிலுவைப்பாதையின் சுவடுகள் ....



1.முதல்  நிலை

இயேசுவின் பிறப்பு - குழந்தைகளின் இறப்பு (சர்வாதிகாரம் )


2.இரண்டாம் நிலை

இயேசுவின் வளர்ச்சி - மதவாதிகளின் எதிர்ப்பு (எதிரிகள் )



3.மூன்றாம் நிலை

இயேசுவின் தடுமாற்றம்  (எதிர்கொள்ளும்  

சவால்கள் )


4. நான்காம் நிலை

இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார் (துரோ கம் )




5. ஐந்தாம் நிலை

மறுதலிக்கப்படுகிறார்   (தனிமைபடுத் தப்படுகிறார்)





 

 6.ஆறாம் நிலை

குற்றம்  சுமத்தப்படுகிறார் (குற்றவாளியாக்கப்படுகிறார்)





7.ஏழாம் நிலை

தீர்ப்பு - மரணதண்டனை (   உயர் நீதிமன்றம் முதல்

உச்சநீதிமன்றம் வரை )


1. Before Annas FRIDAY
2. Before Caiaphas
1 to 5 A. M.
3. Before the Sanhedrin
4. Before Pilate
5 to 6 A. M.
5. Before Herod
6. Before Pilate Again





8. எட்டாம் நிலை

சட்டத்தையும், அதிகாரத்தையும்  எதிர்த்து அவரை காப்பாற்றவும் , ஆதரிக்கவும் யாரும் முன்வரவில்லை .







9.ஒன்பதாம் நிலை

எதிரி வீழ்ந்தான் என்று ஒரு சமூகத்தின் நிம்மதி பெருமூச்சு , சடங்கு சம்பிரதாயங்களை தக்கவைத்துக்கொண்டதாக பெருமிதம்.  (தங்களின் தோல்வியை வெற்றியாக கொண்டாடுகிறார்கள்- நீதியை இருட்டடிப்பு செய்து )



 


 10.பத்தாம்  நிலை

தான்  நடந்த பாதை  கல்வாரிக்குத்தான்  இட்டுச்செல்லும்  என்று தெரிந்திருந்தும், பின்வாங்காமல்  பிடிவாதமாய் தனது பாதையிலிருந்து சற்றும் விலகாமல் நடந்திருக்கிறார் . (தன்னலமற்ற பயணம்- தனது பேர் புகழை பயன்படுத்தி தனக்கென்று எதையும்  சேர்த்துவைக்கவில்லை )

11. பதினொன்றாம்  நிலை

சமூக விடுதலைக்காக , சமத்துவத்திற்காக போராடியவர்  குற்றவாளியாக சிலுவையில் . (யார் மீது குற்றம்?)

12. பனிரெண்டாம் நிலை


வாழ்ந்தபோது  அவரால் சாதிக்கமுடியாததை அவரது மரணமும் , உயிர்ப்பும் ஒரு பிரளயத்தையே பிரசவித்தது . (ஆனால் மரணங்கள் தொடர்ந்துகொண்டுதான்  

இருக்கின்றன )

 
13. பதிமூன்றாம் நிலை

இன்று மிஞ்சியிருப்பது சிலுவப்பாதையின் சுவடுகள் மட்டுமே ... (இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை )



அவர் நடக்காத பாதை :

இந்தப்பாதையை விளம்பரப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட  நிலங்கள் ஏராளம் , முளைத்த கோவில்கள் எண்ணற்றவை ,புரளும்  பணவர்த்தனைகள் கோடி கோடிகள்.

 சிறகுகளை சுமந்துகொண்டு சிலர் சிலுவை என்கிறார்கள் ....

  பழைய ஏற்பாடு- பாலைவனப் பாதையில் பத்துக்கட்டளைகள்.

  புதிய ஏற்பாடு - கல்வாரிப் பாதையில் இரண்டு கட்டளைகள் .

  கட்டளைகள் கல்லறையில் இருந்து உயிர்ப்பது அவரவர் உள்ளமும் மனசாட்ச்சியும் தான் பதில் சொல்லவேண்டும்.

ஒரு இயக்கம் நிறுவனமாக்கப்பட்டு அதற்கு ஒவ்வாத நிலைப்பாடுகளுடன் சமரசம் செய்துகொண்டு, சிலுவைப்பாதையின் மதிப்பீடுகளுக்கு வேறொரு அர்த்தத்தை கர்ப்பித்து தனக்குள்ளே அந்தரங்கமாக புதைத்து வைத்த  இரகசியங்களுடன்   வேறொரு முகத்துடன், முகமூடியுடன் உலாவருகிறது .

"பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்து 

 சேராது "



இயேசு வழிபடவெண்டியவரல்ல, வழ்ந்துகாட்டப்படவேண்டியவர் .










We don’t praise God to feel good, but to do good. (Purpose driven life:pp89-90)


"Cogito ergo sum"

1 comment:

  1. நீங்கள் ஒரு கிறிஸ்துவரா அல்லது இந்துவா ?

    எப்படி பட்ட ஒரு சிந்தனை?

    தொடர்து சிந்திக்க வாழ்த்துகிறேன் .


    வாசகன்

    ReplyDelete