சீர்திருத்தச் சபைகள் சிணுங்குவது சில்லரைக்காகவே!
Reply to the site: http://biblelamp.me/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA/#comment-190
நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.
இயேசு எந்த மதத்தைச் சேர்ந்தவர். இயேசு பைபிளில் சொல்வது என்ன ? இயேசு யூத மதத்தில் பிறந்தார். யூத மதம் இஸ்ரயேலரைப் பின்னணி வரலாறாகக் கொண்டது.... மதங்களும் , பிரிவினைகளும் சுயநலத்துக்காக செயல்படும் அரசியலைப் போன்றவை . ஆதி திருச்சபை தான் இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்தது. இன்று அது கத்தோலிக்கம் ஆனாலும், சீர்திருத்த சபைகலானாலும் குரங்கு கையில் பூமாலையைப்போல இயேசுவைக் கையில் எடுத்துக்கொண்டு
அலங்கோலப்படுத்துகிறார்கள்-
முழு மனித விடுதலைக்காக போராடுபவர்களைத்தவிர...
சிலர் கிளிப்பிள்ளைகளைப்போல வேதத்தை ஒப்பிப்பதையும், பிதற்றுவதையும் கிறிஸ்தவம் என்கிறார்கள், இயேசு வேதத்தில் எங்காவது பிதற்றினாரா !
சீர்திருத்த சபையை நியாயப்படுத்துவதற்காக, நீங்கள் ஹீரோ ஆகவேண்டும் என்பதற்காக கத்தோலிக்கத்தை வில்லனாக சித்தரிப்பது தங்களது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
சீர்திருத்த சபைகள் என்ற பெயரில் சமய அடிப்படைவாதமும், மதவெறியும் தலைவிரித்தாடுவதை உங்களால் மறுக்க முடியுமா ?
கத்தோலிக்கம்
நினைத்தால்
ஒட்டுமொத்த
உலகத்தின் வறுமையை ஒரே நாளில் இல்லாமல் செய்யமுடியும், ஆனால் தனது செல்வங்களும், சொகுசு உல்லாச வாழ்க்கையும் பறிபோய்விடுமே என்று அஞ்சுகிறது ! சீர்திருத்த சபைகள் கத்தோலிகத்தை குறை சொல்லியே பிழைப்பு நடத்துவதை வாழையடி வாழையாக தொன்று தொட்டு வாடிக்கையாக கொண்டிருக்கின்றன ,
தங்களது இயேசுவின் நற்செய்திப்பணி வாழ்க ! எது எப்படியோ உங்கள் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை இயேசுவின் பெயரில் கனஜோராக வியாபாரம் நடத்தி கள்ளாகட்டுகிறீர்கள்.
இன்று பிழைப்பிற்காக மட்டுமே இயேசுவையும், வேதத்தையும் கையில் எடுத்தவர்களின் பட்டியல் அதிகம் . நீங்கள் எந்த ரகம் என்பதை தீர்மானித்துவிட்டீர்களா.
நெடிய ஒரு கட்டுரையை எழுதி கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை , நல்லவர்கள் இல்லை, கத்தோலிக்கத்திலிருந்து
இன்று கொள்கை வேறுபாடுகள் என்று வளர்த்துவிட்ட கட்சியில் இருந்து பிரிந்து வேறு கட்சியை துவங்கும் அரசியல்வாதிகளைப்போல
வளர்ந்த
சீர்திருத்தவாதிகளின்
சபைதான் உண்மையானது, அவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்பது அண்டப்புளுகு.ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கூற்றின் நிதர்சனமாக வாழ்ந்தவர்களின் பட்டியலில் உங்கள் பெயரையும் சேர்த்து தங்களின் சேவைக்காக விருது வழங்கலாம் .
இயேசு தானே உங்கள் எல்லாருக்கும் கடவுள் அப்படியென்றால் உங்களுக்குள்ளே ஏன் இவ்வளவு பிரிவுகள். நான் பெரியவனா நீ பெரியவனா என்பதைத்தவிர வேறு என்ன இருக்கமுடியும் ! ஏழைகளை வஞ்சிக்கிற , மக்களை ஏமாற்றுகிற, வேற்றுமையை , அடிமைத்தனத்தை, பிரிவினைகளை , வெறித்தனத்தை விதைக்கிற எந்த சமயமும் அருவெறுக்கத்தக்கது .
புரையோடிப்போன
முன்னோர்களின்
வெறுப்பையும்
விரோதத்தையும்
விதைத்த வேதாந்தங்களையெல்லாம்
விட்டுவிடாமல்
தொடர்வதும் வன்முறையே. வெகு சாமார்த்தியமாகவும்
,திறமையாகவும் வாதம் செய்வதாலும் நான் பெரியவனா நீ பெரியவனா என்று போட்டி போடுவதாலும் மட்டுமே வெற்றி என்று சிலர் நேர்ந்துவிடப்பட்ட கோவில்மாடுகளைப்போல
மமதையில் தாங்கள் தான் நீதிமான்கள் தங்களுக்கத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்கள் எல்லாம் படுபாவிகள் என்று நெஞ்சை நிமிர்த்தி திரிகிறார்கள்.
வாய் ஜாலத்தினாலும், பேச்சு சாதூரியத்தினாலும் மக்களை மயக்கி ஏமாற்றி கொள்ளையடிக்க இயேசு சொன்னாரா? சபையை வளர்க்கிறோம் என்று தொப்பையை வளர்க்கிறவர்கள் தானே ஏராளம் .
கிறிஸ்தவம் என்ற மதமே கிடையாது . அந்தியோக்கியாவில் தான் முதல் முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (திருத்தூதர் பணிகள் 12:26)
கிறிஸ்தவம் என்ற மதமே கிடையாது . அந்தியோக்கியாவில் தான் முதல் முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (திருத்தூதர் பணிகள் 12:26)
Christ (/kraɪst/) (ancient Greek: Χριστός, Christós, meaning 'anointed') is a translation of the Hebrew מָשִׁיחַ (Māšîaḥ), the Messiah, and is used as a title for Jesus in the New Testament.
The followers of Jesus became known as Christians (as in Acts 11:26) because they believed Jesus to be the Messiah (Christos) prophesied in the Hebrew Bible. Christians designate him Jesus Christ, meaning Jesus the Christos. Christ was originally a title, but later became part of the name "Jesus Christ", though it is still also used as a title, in the reciprocal use Christ Jesus, meaning "The Messiah Jesus". In common usage "Christ" is generally treated as synonymous with "Jesus of Nazareth".
http://en.wikipedia.org/wiki/Christ
இரண்டு கட்டளைகள் , "இயேசு
அவனை நோக்கி: உன்
தேவனாகிய
கர்த்தரிடத்தில் உன்
முழு இருதயத்தோடும் உன்
முழு ஆத்துமாவோடும் உன்
முழு மனதோடும் அன்பு
கூருவாயாக; இது
முதலாம் பிரதான கற்பனை. இதற்கு
ஒப்பாயிருக்கிற இரண்டாம்
கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில்
நீ அன்பு கூருவது
போலப் பிறனிடத்திலும் அன்பு
கூருவாயாக என்பதே.
இவ்விரண்டு கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம் முழுமையும்
தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது
என்றார். " மத்தேயு 22:37-40
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற
என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார்.
அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்'
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார்.
அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்'
எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.''
நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.
வேறு வேலைவெட்டி இல்லாமல் கத்தோலிக்கத்தைப் பற்றியே புனைக்கதைகளைப் பேசி பிழைப்பு நடத்தும் சீர்திருத்தசபைகளுக்கு கண்டனம்.
நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.
நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்.
"Cogito ergo sum"
சரியான சாட்டையடி. இந்த படைப்பை எல்லா கத்தோலிக்க பிஷப்களுக்கும் அனுப்புங்கள். அவர்கள் மாறினால் எல்லோரும் மாற விடிவுகாலம் பிறக்கும்.
ReplyDeleteதிருத்தந்தை ஏன் பதவி விலகினார்? உங்களின் படைப்பை எதிர்பார்கிறேன். விரைவில்.
வாசகன்