"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Friday, 15 February 2013

மரத்துப் போய்விட்டது - சட்டம் வாலை சுருட்டிக்கொள்கிறது


 தங்கத்  தேரை இழுக்க நேரமிருக்கிறது நேரமிருக்கிறது, தங்கத்  தேரை இழுக்க இனிக்கிறது ஆனால்  மக்கள் பணி  செய்யவும் அவரவர் வெற்றிப்பெற்ற தொகுதிகளில் வறுமையை ஒழித்து வளமையான தமிழகத்தைக்  காண கசக்கிறதோ!!!




மக்களின் வரிப்பணத்தில்  உருவாகும் இப்பள்ளி உலகத்தரத்துக்கு இணையாக இருக்குமா !!! அல்லது கடலில்  கரைத்த பெருங்காயமா !!!


 
நம்புங்க இது அரசு பள்ளிதான் -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.

மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. இதை நினைவாக்க துணை நின்ற தலைமையாசிரியை சரஸ்வதியும் இதற்காக அரும்பாடு பட்ட ஆசிரியர் ஃப்ராங்ளினும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

இவர்களின் இந்த சேவை உலகம் அறிய பகிர்வோம் வாழ்த்துவோம்...!
http://www.facebook.com/pages/Sirumugai/144375698939032 





 








 பிழைக்கத்  தெரியாதவர்  போலிருக்கிறது ...சட்டம் தனது கடமையை நீதியோடு செய்தால் சிறைச்சாலைகள் யாரால் நிரம்பி வழியும் என்பது சொல்லியா தெரியவேண்டும் !!!







"Cogito ergo sum"

No comments:

Post a Comment