கவிஞன் கட்சி மதம் அனைத்தையும் கடந்து சுதந்திரமாக வானத்தில் வட்டமடிப்பவன் ,
ஆராய்ச்சி மணியை அடித்து மனசாட்சியை கலங்கடிப்பவன், போகிறவழியிலே குறைக்கும் நாய்களுக்காக பயணத்தை நிறுத்தாதவன், அண்ணா நீங்கள் ஒரு புரட்சிக் கவிஞர், தங்களின் சிந்தனைகள் இன்று பலரால் ஜீரணிக்கமுடியாமல் இருக்கலாம், இன்று பலருடைய மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் தங்களின் புரட்சிகர கருத்துக்கள் நிச்சயம் வெல்லும். தூங்கிக்கொண்டிருப்பவர்களை கொதித்தெழ வைக்கும் தங்களின் சாமர்த்தியமே சாமர்த்தியம். பொய்யைச் சொன்னால் எறும்பு கடிதத்ததைப் போலிருக்கிறது, உண்மையைச்சொன்னால் சிலருக்கு பாம்பு கடித்ததைப் போலிருக்கிறது. உண்மையை தொடர்ந்து சொல்லுங்கள் உலகத்தை உலுக்கிக்கொண்டேயிருங்கள், தூங்கிக்கொண்டே காலத்தை கழிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்... மதிப்பெண் எடுக்க மட்டுமே பயன்படுத்திய பள்ளிக்கூட மூளைகள், நன்றாக சலவை செய்யப்பட்டு சிந்திக்கத் தெரியாமல் சிந்திப்பவர்களைப் பார்த்து கொட்டாவி விடுகின்றன.
"Cogito ergo sum"
No comments:
Post a Comment