2015-புதுவருடத்தை
கொண்டாடுபவர்களுக்கு மட்டும்: இதை முழுவதும் படிக்க விருப்பமில்லாதவர்கள் இதை
படிக்க வேண்டாம். படிக்கத்தெரிந்தவர்கள் முடிந்தால் படியுங்கள். நாம் 2015-ஐ
கொண்டாடுகிறோமா? கொலைசெய்கிறோமா? -என்பதை சொல்லுங்கள்......
இன்று புது வருடம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.யாருக்கு மகிழ்ச்சி? எனக்கு பதில் சொல்லுங்கள்யாருக்கு புது வருடம்?
ஒரு மாதத்திற்கு முன் அரசாங்க உயர் அதிகாரி, ஒரு பெண் எங்கள் பகுதிக்குவந்திருந்து ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்து ஒப்புக்குசப்பான் போல சுத்தமாக வைத்திருங்கள் என்றுசொல்லிவிட்டு மறைந்துபோனார். பிறகு தான் தெரிந்துகொண்டேன் அவர் ஒரு வீட்டுநல சுகாதாரஆய்வாளர், அவரது வேலையே இது மட்டும்தான் என்று. வீடுகளை எல்லாம் சுத்தமாக வைத்திருங்கள்என்று சொல்லிவிட்டு சென்ற அவர், தெருக்களில் உள்ள துர்நாற்றத்தையும் குப்பைகூளங்களையும், அதைஎப்போதுமே கண்டுகொள்ளாத பன்சாயத்து பணியாளர்களைப்போலவே கண்டும் காணாமல் சென்றார்.
ஒருநாள் மட்டும் வேலைப்பார்ப்பதுபோல் வேடிக்கைக்காட்டிவிட்டு தங்கள் வாழ்நாள் முழுதும் நமதுவரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களுக்குத்தான் இது புது வருடம் 2015.
HAPPY NEW YEAR 2015!
கொள்ளையடிப்பவர்களுக்கும் (அரசியல்வாதிகளும்= திருடர்களும்: இருசாராருமே, ஒருத்தன்அதிகாரத்தைவைத்து நம்மை கொள்ளையடிக்கிறான், இன்னொருத்தன் பயமுறுத்தி கொள்ளையடிக்கிறான்)வேலை செய்யாமலே சம்பளம் வாங்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இது புது வருடம். நமக்கு எப்படிஇது புது வருடம்.
2014-ல் தெருவெல்லாம் குப்பைகளைக்கொட்டி அலங்கரித்துவைத்திருக்கிறோம், இதைசுத்தம் செய்வதுபோல் ஒரு இடத்தில் இருந்து கொத்திகுதறி இன்னொரு இடத்தை அசுத்தமாக்குவதுதான்இன்று எல்லா இடத்திலும் அரங்கேறும் கூத்து.
2015-திலும் இதையே தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திடதுடித்துக்கொண்டிருக்கும் குள்ளநரிக்கூட்டத்துக்கு இது புது வருடம். தரமில்லாத சாலைகளை மீண்டும்மீண்டும் போட்டு மக்கள்தொகையை குறைக்கும் நவீன
உக்தியாக நமது உயிரைக்குடிக்கும் அவர்களுக்குஇது புது வருடம். மருந்தை உணவாக்கி, உணவைவிசமாக்கியவர்களுக்கும் அதை மிகப்பெரியவியாபாரசந்தையாக்கி நம்மை நடைபிணங்களாக்கி பணம் சம்பாதிப்பவர்களுக்கு இது புது வருடம்.
ஆமாம்,
நமக்கு எப்படி இது புதுவருடமாகும்,
2015-தை புதுவருடமாக்க நாம் என்ன செய்தோம், அவர்கள் எல்லாம்கொடிகட்டி நம் சமூகத்தையும், நமது எதிர்காலத்தையும் நம்கண்முன்னே சீரழிப்பதை கைகட்டிவேடிக்கைப்பார்த்தோம்.... ஆமாம் நமக்கும் புதுவருடம் 2015.
HAPPY NEW YEAR.
"Cogito ergo sum"
No comments:
Post a Comment