"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Friday, 30 May 2014

மோடியின் பத்து கற்பனைக் கதைகள்:


மோடியின் பத்து கற்பனைக் கதைகள் 
(பத்து கற்பனைகள்):

மோடியின் பத்து கற்பனைக் கதைகள்: வரும் ஆட்சியாண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகிற அமைச்சரவையில் நிரூபிக்கப்பட்ட, நிரூபிக்கப்படமுடியாத குற்றவாளிகள் இருக்கிறார்களாம்.
அரசியல்வாதிகள்:
நல்லது சொல்லி கெட்டது செய்து நாட்டை சூறையாடுபவர்கள் தான் இந்த அரசியல்வாதிகள் நல்லது சொல்லி கெட்டது செய்து மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது நம்மை அவமரியாதை செய்து பந்தாடுபவர்கள் ,நாட்டை சூறையாடுபவர்கள் தான் இந்த அரசியல்வாதிகள்


ஐய்யையோ!!!! நாட்டை கொள்ளையடிக்கவும் சீரழிக்கவும் இன்னொரு கும்பலா!!! கோவிந்தா!!! கோவிந்தா!!!
"Cogito ergo sum"

Sunday, 25 May 2014

ஒரு கொலைகாரன்தானே இன்னொரு கொலைகாரனுடன் கைகுலுக்கமுடியும்:



தமிழ் உணர்வு செத்துப்போய்விட்டது, தமிழன் செத்துப்போய்விட்டான்..
தமிழனைக் கொல்வதும், கொள்ளையடிப்பதும் மிகவும் எளிது என்பதை எல்லோரும் நிரூபித்துவிட்டார்கள்.

ஒரு கொலைகாரன்தானே இன்னொரு கொலைகாரனுடன் கைகுலுக்கமுடியும்:
ஒரு மதவெறி கொலைகாரக்கும்பல் பதவியைப் பிடிப்பதற்கும், பல்லாயிரம் தமிழர்கள் செத்து மடிவதற்கும் யார் காரணம்?
 நீயும் நானும் தானே கண்ணா.... நீயும் நானும் தான்...

மோடியும் மோடியின் கும்பலும் கொலைகாரன் ராஜபக்சேவை அழைப்பதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சகோதரத்துவம், ஒற்றுமையைப்பற்றி பேசும் இந்த கும்பல் - பிராமணிய மேல்தட்டு வர்க்கத்தினரின் வர்ணாசிரம அதர்மத்திலிருந்து  விடுதலை பெற்று மதம் மாறிய இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்களை வதை செய்துகொண்டிருப்பது இந்த BJP மற்றும் RSS தானே. ஒரு கொலைகாரன் தான் இன்னொரு கொலைகாரனுடன் உறவுபாராட்ட முடியும்.  இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்களிடமிருந்து நீதியையும், நியாயத்தையும் எதிரப்பார்ப்பது அடிமுட்டாள்தனம். இந்த இரத்தக்கறைப்படிந்த கொலைகாரன் ராஜபக்சேவுடன் கைகுலுக்கும் கொலைகார கும்பல்களிடமிருந்தும்,
 நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளைவேட்டி பிட்சைக்கார அரசியல்வாதிகளிடமிருந்தும் நாட்டைக் காப்பாற்ற இன்னொரு விடுதலைப் போராட்டம் பிறக்கட்டும்....ஆகஸ்டு 15-ல்நாம் பெற்றது சுதந்திரம் அல்ல, அரசியல்வாதிகள் நம்மை சுதந்திரமாக எந்த வரைமுறையுமில்லாமல்  கொள்ளையடிப்பதற்காக வெள்ளைக்காரனுக்கு பதிலாக வெள்ளைவேட்டிகளுக்கு அடிமைகளாக வாழ ஒத்துக்கொண்ட கருப்பு நாள். வெறிப்பிடித்த கொலைகாரர்களிடமிருந்தும், அபாயகரமான சாலைகள், அசுத்தமான சுற்றுச்சூழல், எல்லாவற்றிலும் கலப்படம், எங்கும் இலஞ்சம், மேலும், இவர்கள் வீட்டுப்பணத்தில் மக்களுக்கு நல்லது செய்வதுபோல எல்லாவற்றிலும் தங்களின் சொந்தப்பெயரை எழுதிவைத்துக்கொள்ளும் நவீன பிட்சைக்காரர்களிடமிருந்தும் விடுதலைவேண்டும்....... கொலைகாரர்களுக்கும், கொள்ளைகாரர்களுக்கும் பயந்து அஞ்சி அடிமைகளாய் வாழும் வரை விடுதலை ஒருபோதும் விடியாது....... கொலைகாரன் ராஜபக்சே நம் தமிழ் சொந்தங்களை கொன்று குவித்தபோது நாம் என்ன செய்தோம்.... அதைத்தானே இப்போதும் செய்துகொண்டிருக்கிறோம், நாம்நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் நாம் செய்யவில்லை,
கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் வளர்த்துவிட்டது யார்? நீயும் நானும் தான் கண்ணா நீயும் நானும் தான்?


பல காரணங்களைக் கற்பித்துக்கொண்டு அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நாம் தான் காரணம் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. இலங்கையைக் காப்பாற்ற தமிழர்களை கொன்றுகுவித்தேன் என்று ராஜபக்சே மார்தட்டிக்கொள்ளும்போது, தமிழர்களைக் காப்பாற்ற நாம் என்ன செய்தோம்.... வேறென்ன வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தோம்..... எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது, தமிழ் உணர்வு செத்துப்போய்விட்டது, தமிழன் செத்துப்போய்விட்டான்.....

ஒரு கொலைகாரன்தானே இன்னொரு கொலைகாரனுடன் கைகுலுக்கமுடியும்:
"Cogito ergo sum"

Monday, 12 May 2014

உண்மையை மறைத்து ஆசிரியர்களை பலிகடாவாக்கும் (Scape-goat) தினமணி ஆசிரியருக்கு முடிவற்றஒரு பாடம்: வாயிலோயே வாயிலோயே! அறிவிப்பாயே அறிவிப்பாயே!





visit:
http://www.dinamani.com/editorial/2014/05/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article2219634.ece





அரசுப்பள்ளிகளின் நிர்வாகச் சீர்கேட்டிற்கும், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கும், மக்களுக்குஅரசுப்பள்ளிகளின் மீது உள்ள நம்பிக்கையின்மைக்கும் நிலையான வேலையில் நிரந்தர, பெரும்பாலான தனியார்பள்ளிகளைவிட அதிக சம்பளம் பெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான் காரணமாம், கண்டுபிடித்துவிட்டார் டௌசர் பாண்டி தினமணி ஆசிரியர்.
நிரந்தரமற்ற, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் தான் தனியார் பள்ளிகளின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார்.....
ஆசிரியர்கள் எப்போதும் எல்லோருடைய வெற்றிக்கு மட்டுமே காரணமாக இருப்பார்கள். வீழ்ச்சி என்றால் தீமையின் வீழ்ச்சிக்கு மட்டுமே காரணமாக இருப்பார்களே தவிர ஒருபோதும் தீமைக்கு அடிபணியவோ துணைபோகவோமாட்டார்கள். 
தினமணி ஆசிரியர் உண்மைகளை மறைத்து பொய்கதைகளுக்கு பொட்டு வைத்து பூ வைத்து, முட்டாள்களுக்கு கொம்புசீவிவிடுகிறார்....



இந்த தலையங்கத்தை எழுதியவனுக்கு கல்வி கற்பித்தவர்கள் தான் 
வெட்கித்தலைகுனியவேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை 
கூறுவதுஅரசுப்பள்ளிகள் சரி இல்லை என்று கும்மியடிப்பதேஒரு சிலரின் பிழைப்பாக உள்ளதுகுறைகளுக்கான காரணங்களையும்அதற்கு காரணமானவர்களையும்மறைத்து ஆசிரியர்களை மட்டுமே குறைகூறும் கூட்டம்உண்மைகளை மறைத்து இதற்குகாரணமானவர்களுக்கு ஜால்ட்ரா அடித்து பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்ற அடிவருடிகளுக்கு 
பாடம்சொல்லித்தந்தவர்கள் தான் தலை குனியவேண்டும்





வாயிலோயே வாயிலோயே ஆசிரியர்கள் ஆசிரியர் மீது பழி சுமத்துவதை நிறுத்துவாயே!
வாயிலோயே வாயிலோயே!
அறிவிப்பாயே அறிவிப்பாயே!
(“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
 
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
 
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி.)


ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் மீது சிலுவைகளை 
சுமத்தும் போதும் கண்ணகியின் கோபம்தான் கண்களில் எரிமலையாய்வெடிக்கிறது:
மக்களும் பத்திரிக்கையாளர்களும் எந்த அளவுக்கு 
அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதற்கு 
இந்தஒரு தலையங்கமே சாட்சிஎனக்கு ஒன்று 
மட்டும்புரியவே இல்லைஎதற்கெடுத்தாலும்
தனியார்பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் 
ஒரே தராசில்வைத்துப் பார்க்கும் மடமைத்தனம் என்று 
ஒழியுமோ!
இந்த தலையங்கத்தை எழுதியவனுக்கு கல்வி கற்பித்தவர்கள் தான் 
வெட்கித்தலைகுனியவேண்டும்.எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை 
கூறுவதுஅரசுப்பள்ளிகள் சரி இல்லை என்று கும்மியடிப்பதேஒரு சிலரின்
பிழைப்பாக உள்ளதுகுறைகளுக்கான காரணங்களையும்அதற்கு 
காரணமானவர்களையும்மறைத்து ஆசிரியர்களை மட்டுமே குறைகூறும் 
கூட்டம்உண்மைகளை மறைத்து இதற்குகாரணமானவர்களுக்கு ஜால்ட்ரா அடித்து பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்ற அடிவருடிகளுக்கு 
பாடம்சொல்லித்தந்தவர்கள் தான் வெட்கித்தலை குனிய வேண்டும்
மதிப்பெண்தான் ஒருவனை அறிவாளியாகஅடையாளப்படுத்த அளவுகோல் என்றால்B.Ed.,D.T.Ed பட்டங்களை கொடுத்து ஆசிரியர்கள் என்றுசொல்லி 
TET லொட்டு லொசுக்குன்னு சொல்லி ஆசிரியர்களை முட்டாளாக்கும் 
உங்கள் புத்திசாலித்தனம் மிகவும் அருமைபதிலை நீங்களே தேடுங்கள்

1. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் கேள்வி 
கேளுங்கள்அரசுப்பள்ளியில்அல்லது தனியார்பள்ளியில் பணிபுரிவதுஎதை தேர்ந்தெடுப்பீர்கள்?

2. அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் கேள்வி 
கேளுங்கள்உங்கள் குழந்தை அதிகமதிப்பெண்கள் பெற அரசுப்பள்ளியில்
 படிக்க வைப்பீர்களா அல்லது தனியார் பள்ளியிலா?

3.  ஆசிரியர்களின் மீது எல்லாப் அண்டப்புளுகுகளையும் சுமத்தி,  உண்மைகளை மூடி மறைத்து இந்தத்தலையங்கத்தை எழுதி முடித்து 
கல்வியில் ஏற்படும் எல்லாஅசம்பாவிதங்களுக்கும் ஆசிரியர்களையே
சுட்டிக்காட்டி தப்பித்துக்கொள்ளும் மானங்கெட்டஒவ்வொருவருக்கும் இந்த கேள்வி: (i) உங்கள்பிள்ளைகள் படிப்பது தனியார் பள்ளியிலாஅரசுப்பள்ளியிலா?
(ii) அறிவாளிகள்வெற்றிபெற்றவர்கள் என்று நீங்கள் சொல்லும் 
ஒவ்வொருவரின் மதிப்பெண்ணையும் ,தங்களின் மதிப்பெண்கள் உட்பட
 பிரசுரிக்க நீங்கள் ரெடியா?
(iii)TET கதைவிக்ரமாதித்தன் வேதாளம் கதையைப் போன்றதுதகுதியான ஆசிரியர்கள் வேண்டும்இதைநிர்ணயம் செய்வது இந்தத் தகுதித்தேர்வின் மதிப்பெண்கள் என்றால்தற்போது நடந்த மக்களவைத்தேர்தலில் வெற்றிப்பேறப்போகிறவர்களும் இதுவரைவெற்றிபெற்று மாநிலங்களையும்
நாட்டையும் கொள்ளையடிப்பவர்களும்கொள்ளையடித்தவர்களும் 
தகுதியானவர்களா?

எனக்கு கல்வி கற்பித்த ஒவ்வொரு ஆசிரியரும் எனக்குத் தெய்வம்
வாயிலோயே வாயிலோயே!
அறிவிப்பாயே அறிவிப்பாயே!

ஆசிரியரை இழிவுபடுத்தும் ஒவ்வொருவனும் முட்டாள்!
முட்டாள்களின் சாம்ராஜியத்தில் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் இடமில்லை....
பதவியையும், ஆட்சிஅதிகாரத்தையும் முட்டாள்களிடம் கொடுத்து கல்வியை கெடுத்து,
ஆசிரியர்களை குறை சொன்னால்.... என்ன நியாயம்?


கணவனை இழந்த கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்தாள்
அங்கிருந்த காவலனை நோக்கி,“வாயில் காவலனேவாயில் காவலனே
நல்ல அறிவு அற்றுப் போனதீய நெஞ்சத்தால் செங்கோல்முறையினின்றும் தவறிய கொடுங்கோல் மன்னனுடைய வாயில் காவலனே
பரல்களையுடைய இணைச்சிலம்புகளுள் ஒரு சிலம்பினை ஏந்திய கையை உடையவளாய்தன் கணவனை இழந்தாள் ஒருத்திஅரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்” என்று 
கூறினாள்.

வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே

                         (வழக்குரை காதை : 24-29)






(அறிவு அறை போதல் = அறிவு சமயத்தில் உதவாமல் போதல்;இறைமுறை = செங்கோன்மை)
B.Ed, D.Ted சிலம்புகளுக்கு சொந்தக்காரர்களை திருடர்கள், தகுதியற்றவர்கள் என்று சொல்லும் முட்டாள் யார்?
வாயிலோயே வாயிலோயே!
அறிவிப்பாயே அறிவிப்பாயே!


 



"Cogito ergo sum"