தமிழ் உணர்வு செத்துப்போய்விட்டது, தமிழன் செத்துப்போய்விட்டான்..
தமிழனைக் கொல்வதும், கொள்ளையடிப்பதும் மிகவும் எளிது என்பதை எல்லோரும் நிரூபித்துவிட்டார்கள்.
ஒரு கொலைகாரன்தானே இன்னொரு கொலைகாரனுடன் கைகுலுக்கமுடியும்:
ஒரு மதவெறி கொலைகாரக்கும்பல் பதவியைப் பிடிப்பதற்கும், பல்லாயிரம் தமிழர்கள் செத்து மடிவதற்கும் யார் காரணம்?
நீயும் நானும் தானே கண்ணா.... நீயும் நானும் தான்...
மோடியும் மோடியின் கும்பலும் கொலைகாரன் ராஜபக்சேவை அழைப்பதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சகோதரத்துவம், ஒற்றுமையைப்பற்றி பேசும் இந்த கும்பல் - பிராமணிய மேல்தட்டு வர்க்கத்தினரின் வர்ணாசிரம அதர்மத்திலிருந்து விடுதலை பெற்று மதம் மாறிய இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்களை வதை செய்துகொண்டிருப்பது இந்த BJP மற்றும் RSS தானே. ஒரு கொலைகாரன் தான் இன்னொரு கொலைகாரனுடன் உறவுபாராட்ட முடியும். இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்களிடமிருந்து நீதியையும், நியாயத்தையும் எதிரப்பார்ப்பது அடிமுட்டாள்தனம். இந்த இரத்தக்கறைப்படிந்த கொலைகாரன் ராஜபக்சேவுடன் கைகுலுக்கும் கொலைகார கும்பல்களிடமிருந்தும்,
நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளைவேட்டி பிட்சைக்கார அரசியல்வாதிகளிடமிருந்தும் நாட்டைக் காப்பாற்ற இன்னொரு விடுதலைப் போராட்டம் பிறக்கட்டும்....ஆகஸ்டு 15-ல்நாம் பெற்றது சுதந்திரம் அல்ல, அரசியல்வாதிகள் நம்மை சுதந்திரமாக எந்த வரைமுறையுமில்லாமல் கொள்ளையடிப்பதற்காக வெள்ளைக்காரனுக்கு பதிலாக வெள்ளைவேட்டிகளுக்கு அடிமைகளாக வாழ ஒத்துக்கொண்ட கருப்பு நாள். வெறிப்பிடித்த கொலைகாரர்களிடமிருந்தும், அபாயகரமான சாலைகள், அசுத்தமான சுற்றுச்சூழல், எல்லாவற்றிலும் கலப்படம், எங்கும் இலஞ்சம், மேலும், இவர்கள் வீட்டுப்பணத்தில் மக்களுக்கு நல்லது செய்வதுபோல எல்லாவற்றிலும் தங்களின் சொந்தப்பெயரை எழுதிவைத்துக்கொள்ளும் நவீன பிட்சைக்காரர்களிடமிருந்தும் விடுதலைவேண்டும்.......
கொலைகாரர்களுக்கும், கொள்ளைகாரர்களுக்கும் பயந்து அஞ்சி அடிமைகளாய் வாழும் வரை விடுதலை ஒருபோதும் விடியாது....... கொலைகாரன் ராஜபக்சே நம் தமிழ் சொந்தங்களை கொன்று குவித்தபோது நாம் என்ன செய்தோம்.... அதைத்தானே இப்போதும் செய்துகொண்டிருக்கிறோம், நாம்நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் நாம் செய்யவில்லை,
கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் வளர்த்துவிட்டது யார்? நீயும் நானும் தான் கண்ணா நீயும் நானும் தான்?
No comments:
Post a Comment