04/11/2017
"அம்மா ஆட்சியின் சாதனை"
எங்கள் ஊரின் புதிய அடையாளம்:
இதன் அருமை பெருமையெல்லாம்
அம்மா ஆட்சியையே சாரும்.
சென்னீர்குப்பம் என்ற
எங்கள் ஊரின் பெயர் "சென்னீர்குப்பைக்கூளம்" என்று பெயர்மாற்ற அதிமுக அரசு அரும்பாடுபட்டு அயராது உழைத்துவருகிறது.
600 056-ன் கதை:
அம்மா ஆட்சி super.மாண்புமிகு அம்மா புரட்சித்தலைவி மறைந்த தமிழக முதல்வர் அவர்களது ஆட்சிக்காலத்தில் இருந்து எங்கள் தெருவில் துவங்கப்பட்டு சீரும் சிருப்புமாக ஊரிலுள்ள குப்பைகளையெல்லாம் சேகரித்து இரவுமுழுவதும் எங்கள் தெருவில் பாதுகாத்து சிலநேரம் இரவும் பகலும் சேமித்துவைத்தகுப்பைகளைக் காண்பது கண்கொள்ளாக்காட்சி.
குறிப்பாக மழைகாலங்களில் இதன் வாசனை எங்கள் தெரு அமெரிக்காவையே மிஞ்சுவிடும் அளவுக்கு சுகாதாரம்.
இத்தகைய மக்கள்நலப்பணியை சீரும் சிறப்புமாக ஆற்றிவரும் அதிமுக ஆட்சியைப் புகழ வார்த்தைகளில்லை.
இந்தமக்கள்நலப்பணி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் சிறப்பாக எங்கள் தெருவில் நடைபெற ஒத்துழைக்கும் அனைத்து அரசு அதிகாரிகள் குறிப்பாக அரசு பொதுசுகாதார அதிகாரிகளை மாலை போட்டு பாராட்டியே ஆகணும். இதில் முக்கியமாக எங்கள் தெருவை அதிநவீன முறையில் பராமரிக்கும் சென்னீர்குப்பம் ஊராட்சி அரசு அலுவலர்களுக்கு கட்டாயம் சிலைவைத்தேயாகவேண்டும்.
உங்கள் ஊரிலும் அதிமுக அரசின் மக்கள்நலத்திட்டங்கள்
சீரும் சிறப்புமாக நடைபெறுகிறதா?
சென்னை பூந்தமல்லி, கரையான்சாவடியிலுள்ள
சென்னீர்குப்பம்
உலகமே மூக்கின்மேல்விரல்வைத்துப்பார்க்கும் அதிசயம்.
எங்கள் ஊர்மக்கள்
அறிவாளிகள் மட்டுமல்ல மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
சான்றுக்கு புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன்.
தயவுசெய்து எங்கள் ஊர் சென்னீர்குப்பம் ஊராட்சி அரசு அலுவலர்களை வாயார வாழ்த்துங்கள். சென்னீர்குப்பம் என்ற
எங்கள் ஊரின் பெயர் "சென்னீர்குப்பைக்கூளம்" என்று பெயர்மாற்ற அதிமுக அரசு அயராது உழைக்கின்றது.
அம்மா ஆட்சி super.
"Cogito ergo sum"
No comments:
Post a Comment