"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Wednesday, 29 November 2017





மாணவர்களின் தொடர்தற்கொலைகளுக்கு பத்து காரணங்கள்:
ஆனால்,
உங்கள் எல்லாருக்கும்
ஒரேஒரு காரணம்
ஆசிரியர் மட்டும்தான்...
அதெப்படி?

திட்டியதால்
மாணவர்கள் தற்கொலை
என்றால் ஆசிரியர்கள் மட்டும்தான் திட்டுகிறார்களா?
தொடர்ந்து நடக்கும்
மாணவர்களின் தற்கொலைகளுக்கு பின்னால்
ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார, உளவியல் பிரச்சினைகளை ஆராயாமல் சமீபகாலங்களில்
எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை மட்டுமே கைகாட்டித் தப்பித்துக்கொள்ளும்
நமது புத்திசாலியான சமுதாயத்தை பாராட்டியேயாகணும்.

உங்கள் குற்றச்சாட்டின்படியே ஆசிரியர்கள் திட்டியதால்தான் சமீபத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்றால் கட்டாயம் அந்த ஆசிரியர்களை தூக்கிலடவேண்டும்.

அதற்குமுன் ஆசிரியர்கள் ஏன் திட்டுகிறார்கள்?

1.  தேர்ச்சிவிகிதத்தைக் காரணம்காட்டி இனி எந்த ஆசிரியரையும் நிர்பந்திக்காமல் உங்களால் இருக்கமுடியுமா?

2. படித்தாலும் படிக்காவிட்டாலும் பரவாயில்லை  பாடம் நடத்துவதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது என்று உத்திரவாதம் கொடுக்கமுடியுமா?

3.  அன்பாக சொல்லலாமே என்று வரிந்துகட்டிக்கொண்டு சிலர் வருவீர்கள்.... எல்லாரும் மிருகங்களாக காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட
நிலையில் அன்பு என்றால் அடிதடிமட்டுமே.
எங்க இந்த அரசியல்வாதிகளிடம்
ஊழல்செய்யாதிங்க மக்கள் பணத்த கொள்ளையடிக்காதிங்கண்ணு
அன்பா சொல்லிப்பாருங்க கேக்கிறானுங்களான்ணு பார்ப்போம்.
இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை மொதல்ல தூக்கில போடணும்.

4.  ஆசிரியர்கள் அடிப்பதும் திட்டுவதும் நம் குழந்தைகளின் நன்மைக்கே என்ற நிலை தலைகீழாக மாறி ஆசிரியர் என்றால்   ஒழுக்கமில்லாத தலைமுறையை உருவாக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

5.   அதிக உழைப்பு, மன உளைச்சல்  நிரந்திரமில்லாத வேலை:  தனியார்பள்ளி ஆசிரியர்கள். (சில விதிவிலக்குகள்)

அதிக சம்பளம், நிரந்தரவேலை,
 தரமற்றநிர்வாகம், மோசமான பள்ளிகட்டமைப்பு : அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.(சில விதிவிலக்குகள்)
ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள், இடையூறுகளை
நிவர்த்திசெய்யாமல் தற்கொலைகளை தடுக்கமுடியாது.

6.மதிப்பெண்களுக்காக தற்கொலை செய்துகொள்வது குறைந்து, ஆசிரியர் திட்டினால் தற்கொலை என்றால் அடுத்து
என்ன ?

7.  நம்பிக்கையின்மை பெருகிவருகிற காலகட்டம் இது:
நாம் சாப்பிடும் உணவு 100% ஆரோக்கியமானதா? நம்பிக்கையில்லை
தமிழ்நாட்டில் விவசாயிகள் வாழ்வு செழிக்குமா? நம்பிக்கையில்லை
(விவசாயிகளின்  தற்கொலைகளுக்கு எந்த ஆசிரியர் காரணம்?)

ஏழைமக்கள் கந்து வட்டியில் இருந்து விடுதலை பெறுவார்களா?
நம்பிக்கையில்லை
(கந்துவட்டி தற்கொலைகளை எந்தக்கணக்கில் சேர்ப்பீர்கள்?)

பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவழித்து நல்ல
வழிகாட்டுகிறார்களா?
நம்பிக்கையில்லை
(மொபைலும் தொலைக்காட்சியும் பலரை டாஸ்மாக்கும் பைத்தியங்களாக்கிவிட்டன)
 பெற்றோர் அரவணைப்பும் சரியான வழிகாட்டுதலும் இல்லாத குழந்தைகள் வழிமாறிப்போகிறார்கள்.

அறவே நம்பிக்கையில்லாத சமுதாயம், திரும்பியபக்கமெல்லாம் தற்கொலைகள்....
தற்கொலை கலாச்சாரத்தை பரப்பியது யார்... சாதிவெறியில் துவங்கி காதலை பிரித்து நீங்கள் ஆரம்பித்து வைத்தது,  ஏழைகளை வஞ்சித்து அவர்களை வாழவிடாமல் தற்கொலைக்குத் தள்ளியது இன்று காட்டுத்தீயாய் நம் தலைமுறையினரை தொற்றிக்கொண்டுவிட்டது.
கோழைகள் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களை கோழைகளாக்கியது யார்?

 8.வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே என்பதால் செல்லம் அதிகம். நோய்நொடியில்லாத குழந்தைகளும் அபூர்வம். மிகவும்
பவவீனமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

9. குழந்தைகளை பெற்றோர் கண்டித்த காலம் போய்
பெற்றோரை குழந்தைகள் மிரட்டுகிற காலத்தில்
ஆசிரியர்கள் எதைச்செய்தாலும்
குற்றம்தான்.

10. இக்காலத்திற்கேற்ப கல்விமுறையை மாற்றாமல் ஆசிரியர்களைமட்டுமே எவ்வளவுகாலம் குற்றவாளிகளாக்கி உண்மையை மறைப்பீர்கள்?

குழந்தைப்பருவத்தை  மொபைல்களிலும் வெறும் மதிப்பெண்களிலும் தொலைத்திடாத குழந்தைகள்,
ஓடியாட பரந்த விளையாட்டுத்திடல், நவீன கழிப்பறைகள், உலகத்தரகட்டடவகுப்பறைகள், மகிழ்ச்சியாக கற்கும் கல்வித்திட்டத்தை,  ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள்,
எல்லா ஆசிரியர்களுக்கும் நிரந்தர வேலை ஒரே ஊதியம்
என்ற நிலை வராதவரை
ஆசிரியர்கள் உங்களுக்கு குற்றவாளிகள்தான்.
தமிழ்நாடு என்ன சோமாலியாவா....
இவற்றையெல்லாம்
நிறைவேற்றமுடியாது என்று சொல்ல தமிழ்நாடு என்ன பஞ்ச பரதேசிகளின் நாடா?


"Cogito ergo sum"

No comments:

Post a Comment