“THE BEST CLASSWORK OF THE BEST STUDENT FROM SETHU BHASKARA MAT.HR.SEC SCHOOL”
The best class workyou would ever love to preserve in your life. This class work casts a spell on those who just look at it……. Do you want to keep the pot boiling, ……. fill your heart with inspiration from the footsteps of your good friends…. Roll up your sleeves and get ready to contribute your best……. All THE BEST DEAR CHILDREN……………
All those who are ready for the exam, celebrate
it. This exam is a golden opportunity to prove your ability and to say to the world that you are BORN TO WIN. MARK MY WORDS, YOU ARE BORN TO WIN.
Dear students, this exam never ends here, the real exam
begins with the test of your character discipline, honesty, truthfulness,
obedience, respect and all the humanitarian values that you practise out of your learning
experience. If these values are absent, the exam that you are writing and the
marks you score will be a castle in the sky.
தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்.
பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதாகஎதிர்கொள்ள இப்போதில் இருந்தே, சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.மாணவர்களுக்கான, ஆலோசனைகள்.....இதோ: ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். நன்றாக படித்த பாடங்களுக்கு குறைந்த நேரமும், அதிகம் படிக்காத பாடங்களுக்கு, அதிக நேரமும் ஒதுக்க வேண்டும்.கணக்கு, வரைபடங்களுக்கு, தினமும் தனியாக நேரம் ஒதுக்குவது நல்லது. படிப்பின் இடையே, டீ, பிஸ்கட், வெள்ளரி, பேரீச்சம்பழம் சாப்பிடலாம். தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள், படிப்பில் மட்டுமே முழு கவனம் செல்ல வேண்டும்.படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதுவது, 16 முறை படிப்பதற்குசமம்.கிரிக்கெட் விளையாடுவது, "டிவி' பார்ப்பதை கைவிடுவது நல்லது; அப்போது தான் அதிகமதிப்பெண் பெற முடியும்.தேர்வு காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.தேர்வுக்கு தயார் செய்யும் நேரத்தில், தியானம் செய்வது, பிடித்த விளையாட்டு விளையாடுவது பதற்றத்தை தணிக்கும்.தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, எழுது பொருட்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்லும் முன், தேவையான அனைத்தும் உள்ளதா என, சோதித்து பின், அறைக்குள் செல்ல வேண்டும்.தேர்வுக்கு முந்தைய அரை மணி நேரத்தில் எதையும் படிக்க வேண்டாம். தேர்வில், ஒரு மதிப்பெண் பதில்களை முதலில் எழுதிவிட வேண்டும்; பின், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுதலாம். கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம்.தேர்வு முடிய, இரண்டு நிமிடத்திற்கு முன் தேர்வு எழுதுவதை நிறுத்தி விட வேண்டும்.
என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி:
பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி. ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம்.
எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும். இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது. குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள்இடம்பெறுகின்றன. வினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும் தெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும். புளு மை பேனாவால் எழுதும் மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். ஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும்.முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த முறைப்படியே, இத்தேர்விலும்தொடருவது நல்லது. படிக்கும் போது தூக்கம் வந்தால், முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள். தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும். தேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும். பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு, ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து, அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம்.
இதை அடிக்கடி செய்தால், தேர்வு சிரமமாக இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
தானாகவே யாருடைய உந்துதல் இல்லாமல் ஆர்வத்துடன் படித்து முன்னேற துடிக்கும் மாணவர்களுக்காக மட்டுமே இந்த ஒளிக்காட்சி: (மற்றவர்கள் இதைப் பார்ப்பது ஆபத்து)
கல்வியாளர்களுக்காகமட்டுமே?
தேர்வுமுறை மாறவேண்டும் ஏன்?
தேர்வு என்பது வன்முறையா?
Nevergiveup…
தடைகளை உடைப்போம்.... புதியதோர் உலகு படைப்போம்............ "Cogito ergo sum"
Dear boys and girls get into the boots of the exams and make your dreams come true.... the time to prove your potentiality has come.
Don't wait for the cat to jump, plan to build a beautiful future, don't worry about the results, study with enthusiasm to achieve and make difference. never forget to decorate your marks with noble thoughts and splendiferous behaviour.........
A man who does not think and plan long ahead will
find trouble right at his door
A
man who does not think and plan long ahead will find trouble right at
his door. - See more at:
http://quotationsbook.com/quotes/tag/planning/#sthash.ysNaxc4S.dpuf
A
man who does not think and plan long ahead will find trouble right at
his door. - See more at:
http://quotationsbook.com/quotes/tag/planning/#sthash.ysNaxc4S.dpuf
A
man who does not think and plan long ahead will find trouble right at
his door. - See more at:
http://quotationsbook.com/quotes/tag/planning/#sthash.ysNaxc4S.dpuf
A
man who does not think and plan long ahead will find trouble right at
his door. - See more at:
http://quotationsbook.com/quotes/tag/planning/#sthash.ysNaxc4S.dpuf
Every well built house started in the form of a definite purpose plus a
definite plan in the nature of a set of blueprints